Others
புழல்–மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃதார் நிகழ்ச்சி..

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புழல் நிலா பேலஸ் மண்டபத்தில் இஃதார் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர். ஏ.அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
யூசுப் அலி, காஜா இப்ராஹிம் ஹபீப் ரஹ்மான் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர்.என். சாதிக் பாஷா வரவேற்றார்.நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான ப. அப்துல்சமது, சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர். மாதவரம் எம்.எல்.ஏ.எஸ். சுதர்சனம் மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர். புழல் எஸ். ஏ. ஷேக் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாதவரம் பகுதி தலைவர்.
எஸ். இம்ரான் பாபு நன்றி கூறினார்.
