fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் நடிகை விஜயசாந்தி !

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நடிகை விஜயசாந்தி ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.

நடிகை விஜயசாந்தி, சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட்டார். 1998 ஆம் ஆண்டு முதலில் பாஜகவில் சேர்ந்தார். டி.ஆர்.எஸ் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு மாறி, கடைசியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் நடிகை விஜயசாந்தி.

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்த விஜயசாந்தி 2009 -ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். கடந்த 2014 -ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்தார். நடராஜன் மறைந்தபோதும் சசிகலாவைச் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார் விஜயசாந்தி. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை நேற்று சந்தித்த விஜயசாந்தி ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசிக்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் தற்போதைய நிலை, தமிழக அரசியல் உள்ளிட்ட விவகாரங்களை இரு வரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் காங்கிரஸ் கூட்டணிக்கு அவரது ஆதரவைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. கட்சியினருடன் கலந்து ஆலோசித்து விட்டு பதில் சொல்வதாக சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் டிடிவி. மேலும் விஜயசாந்தி, தினகரனை ஆதரித்து பிரசாரமும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close