fbpx
Others

புத்தாண்டைமுன்னிட்டுஅருணாசலேஸ்வரர் கோவிலில்பக்தர்கள் கூட்டம்…

திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - பவுர்ணமி கிரிவலம்  செல்ல தடை | Tiruvannamalai Annamalaiyar temple open today Pournami  Girivalan ban district collector - Tamil ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு - Kalasapakkamபுத்தாண்டைமுன்னிட்டு,இன்றைய நாளை கடவுள் வழிபாட்டுடன் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள்குவிந்து வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்துகாணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அண்ணாமலையாரை தரிசிக்க சுமார் 6 மணி நேரம் ஆனதாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம்சென்றவண்ணம் உள்ளனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோலில்களில் சாமி தரிசனம் செய்தனர்இதனால் அஷ்டலிங்க கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் காஞ்சி சாலை கிரிவல பாதையில்உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close