புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் வரலாறு மாறுமா….?
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதியம் 1 மணிக்கு 56+சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அண்டை மாநிலமான புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்கு தடையின்றி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய, 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அசாமில் காலை 9 மணிக்கு 17.87 சதவீத வாக்குகள் பதிவாகின. கேரளாவில் 16.23 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 17.41 சதவீத வாக்குகளும் செலுத்தப்பட்டு இருந்தன.காலை 11 மணி நிலவரப்படி, அசாமில் 38.92 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கேரளாவைப் பொறுத்தவரை 33.28 சதவீத வாக்குகளை மக்கள்செலுத்திஇருந்தனர்.அதேநேரத்தில்புதுச்சேரியில்37.06சதவீதவாக்குகள்பதிவாகின. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி அன்று மொத்தமாக வெளியாகின்றன.புதுச்சேரி – 56.47 சதவீத வாக்குப்பதிவு கேரளா – 58.89 சதவீதவாக்குப்பதிவு அசாம்- 58.26 சதவீத வாக்குப்பதிவு