Others
புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்…
மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு தடையில்லா, சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில் நீர் தேக்க தொட்டி பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறை அவ்வப்போது செய்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குடிநீர்விநியோகம்தற்காலிகமாகநிறுத்தம்செய்யப்படும் அதன்படி, வில்லியனூர் குடிநீர் பிரிவு பொறையூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாளை (17.10.2025) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இதேபோல் கோபாலன் கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18.10.2025)சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.