fbpx
Others

பாடியநல்லூர் விபு வித்யா பீடம் சார்பில் 13ம் ஆண்டு–கலைமுதுமணி. ஆர். முருககனி உரை…

பாடியநல்லூர் விபு வித்யா பீடம் சார்பில் 13ம் ஆண்டு மார்கழி விழாவில் தினமும் மாலை 6மணி அளவில் கைவல்யநவநீதம் விளக்க உரை நிகழ்ச்சி நடக்கிறது.மொண்டியம்மன் நகர், சில்ரன்ஸ் பாரடைஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியின்அமைப்பாளர்களாக பிர்மேந் திரா, பாலகிருஷ்ணன், ரவிசங்கர், பாபு சாமிமார்கள் செயல்படுகினர்.நிகழ்ச்சியில் பக்தியும் சித்தியும் தலைப்பில் சூரப்பேடு. வள்ளளார் சபையை சார்ந்த தயவு. வேணு அடிகள் சொற்பொழிவாற்றினார், “தனிஒருமனிதன் திருந்திவிட்டால்”என்ற தலைப்பில் கலைமுதுமணி. ஆர். முருககனி விளக்க உரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர். கோகுல். வைத்தீஸ்வரன் கலந்து கொண்டார்.மார்கழி மாதம் 30நாட்களும் (ஜனவரி 14 வரை) மாலை 6மணிக்கு தொடங்கி இரவு 8மணிவரை நிகழ்ச்சி நடப்பதாக அமைப்பாளர். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Related Articles

Back to top button
Close
Close