fbpx
Others

பாடியநல்லூர் — பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..

பாடியநல்லூர் சுற்றுவட்டார பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் 50 வது நாளில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பலன் தரும் மரங்கள், நிழல் தரும் மரங்கள் நடுவதோடு அதற்கு சுற்றி வேலி அமைத்து மரக்கன்றுகளை பாதுகாப்பதும் அந்தப் பகுதியை மக்கள் மூலமாக மரக்கன்றுகள் வளர்வதற்கு தொடர்ந்து நீர் ஊற்றுவது போன்ற செயல்களை செய்து வருகின்றார்கள்.இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். ஸ்ரீனிவாசன், இணை ஒருங்கிணைப்பாளர். ஜி. ராஜேந்திரன் மரங்களின் காதலன். பாட்ஷா பாய் மற்றும் உறுப்பினர்கள், திருலோக சந்தர், ஆடிட்டர். முரளி,அல் கரம். பீர் முகமது, முன்னாள் உதவி காவல் ஆய்வாளர். ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியர், பழனி, சிவா, டாக்டர். பாலசுப்பிரமணியம், சிவகுமார் உட்பட பலர் ஆர்வத்தோடு இதில் கலந்து கொள்கிறார்கள். குறிப்பாக பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனை இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close