பாடியநல்லூரில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டம் துவக்க விழா…

செங்குன்றம், ஜனவரி 10: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா பாடியநல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, தங்கள் கனவினை தெரிவித்தவர்களுக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்கினார்.இவ்விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகாந்த் செந்தில், டாக்டர் கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ். சுதர்சனம், எஸ். சந்திரன், டி.ஜெ. கோவிந்தராஜன், வி.ஜி. ராஜேந்திரன், ஆ. கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், கே.பி.பி. சங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி. ஷஜீவனா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மீ.வே. கர்ணாகரன், செங்குன்றம் பேரூர் பொறுப்பாளர் ஆர்.டி. சுதாகர், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோரை கோ.தயாளன், பகுதி செயலாளர்கள் புழல் எம்.நாராயணன், ஜி.துக்காராம், தனியரசு, ஏ.வி. ஆறுமுகம், வை.ம.அருள்தாசன், வட்டச் செயலாளர்கள் எம்.சரவணன், அன்பின் மகேஷ், சுந்தரம், மாமன்ற உறுப்பினர் இ.ஏழுமலை, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
