பாஜக திருவனந்தபுரம்மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி….!
திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றிருக்கிறது.மாநகராட்சியை 45 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தற்போது கைப்பற்றியிருக்கிறதுமொத்தமுள்ள 101 வார்டுகளில்பாஜக50வார்டுகளைகைப்பற்றியிருக்கிறது.எனவேபாஜகசார்பில்போட்டியிட்ட50கவுன்சிலர்களில்யாரேனும்ஒருவர்தான்மேயராகதேர்ந்தெடுக்கப்பட்டவாய்ப்புஇருக்கிறது.வளர்ச்சியை முன்னிறுத்திதான் பாஜக இந்த தேர்தலில் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே வளர்ச்சியை கட்சி கொடுக்கும் என்கிற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நபரைத்தான் கட்சி மேயராக தேர்ந்தெடுக்கும். அப்படியாக மூன்று பெயர்களை கட்சி பட்டியலிட்டிருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் ஆர்.ஸ்ரீலேகா. இவர் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் பாஜகவில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட, சாஸ்தமங்கலம் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். இவ்வளவுபெரியநபர்,சாதாரணவார்டுகவுன்சிலராகதேர்தலில்பாஜககளம்இறக்கிஇருந்தபோதே,இவர்மேயர்வேட்பாளருக்காகதான் களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்று பரவலாக பேச்சுக்கள் இருந்தன.வயதில் மூத்தவராகவும், உயர்மட்ட அரசு நிர்வாக அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால், மாநகராட்சி
நிர்வாகத்தை வழிநடத்த இவர் சரியான தேர்வாக இருக்கலாம் என்று கட்சி கருதுகிறது. அதேபோல இவரை தவிர, மற்ற இரண்டு பெயர்களையும் கட்சி தனது பட்டியலில் வைத்திருக்கிறது. வி. வி. ராஜேஷ் அல்லது எம்.ஆர். கோபன் ஆகியோர் மேயராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த கவுன்சிலர் தேர்தல் வெற்றி பெற்று, இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தலைமைப் பொறுப்பை வகிக்க, அனுபவம் வாய்ந்த நபரை தேர்ந்தெடுப்பது கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.அந்தவகையில்மேற்குறிப்பிட்டஇரண்டுபேரும்அனுபவசாலிகள்என்பதால்இவர்களதுபெயர்பட்டியலில்இருக்கிறது.மாநகராட்சி நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, உள்ளூர் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை மிகவும் சிக்கலானவை. எனவே, பல ஆண்டுகளாக கவுன்சிலராக இருந்த மூத்த தலைவர்கள், இந்த செயல்முறைகள், மாநகராட்சியின் வரவு செலவு திட்டங்கள் மற்றும் அரசு அதிகார வர்க்கம் ஆகியவற்றுக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருப்பார்கள். எனவேதான் . வி. ராஜேஷ் மற்றும் எம்.ஆர். கோபன் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.ஆர்.ஸ்ரீலேகா போன்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு நிர்வாக அமைப்பை புரிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்படும். இது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு காரணமாக அமையலாம். எனவே, முதலில் மூத்த கவுன்சிலரை மேயராக்குவது, அடுத்த தேர்தல்களில் தாங்கள் நியமிக்க விரும்பும் ஒருவரை மேயராக நியமிப்பது என்ற முடிவுக்குள் கட்சி செல்லவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மட்டுமல்லாது வி. ராஜேஷ் அல்லது எம்.ஆர். கோபன் இருவரும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்திருக்கிறார்கள். கட்சி விசுவாசிகளின் நம்பிக்கையை பெறுவதற்காக இவர்களை மேயராக்க கட்சி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பாஜகவை எதிர்காலத்தில், கேரளத்தில் பலமாக வளர்க்க பயன்படும். அதேபோல இவர்கள் இருவரும், உள்ளாட்சி அமைப்புகளில் அனுபவம் கொண்டவர்கள் என்பதால் இவர்களை மேயராக நியமிப்பதன் மூலம் மேயருக்கான போட்டியை எளிதில் முடித்து வைக்க முடியும் என்றும் கட்சி நம்புகிறது.