fbpx
Others

பாஜக–செங்கோட்டையனை வைத்து வேலையை தொடங்கியது..

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷயம் கவனம் பெற்றிருக்கிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சு குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்கருத்துதெரிவித்திருப்பதுகவனம்பெற்றிருக்கிறது.நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி இருக்கையில் நயினார் நாகேந்திரனின் கருத்து பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறதுஇது குறித்துSengottaiyan BJP AIADMK பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைப்பது பற்றி எடப்பாடி என்ன யோசிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களை இணைக்க முடியாது என்பதை எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கிறது. இதுகுறித்து பலமுறை ஓபன் ஆக அவர் பேசியிருக்கிறார். ஆனால் இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த பிறகு, பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் பேசியிருக்க கூடிய விஷயம் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லது தானே என்று நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். கூட்டணி கட்சி விஷயத்தில் தலையிட மாட்டோம் என்று அமித்ஷாவே இதற்கு முன்னர் கூறியிருக்கிறார். ஆனால் தற்போது திடீரென அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்லது என்று நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜக இருக்கிறதோ என்று கேள்வியை எழுப்பிஇருக்கிறது.இந்ததேர்தலில்எல்லோரும்சேர்ந்துஇருந்தால்தான்வெற்றிபெறமுடியும்என்பதைஉணர்ந்தபாஜக,செங்கோட்டையனைவைத்துகாய்நகர்த்துகிறதோஎனசந்தேகம்இருக்கிறது.செங்கோட்டையனை வைத்து எடப்பாடி பழனிசாமியின் உறுதியை கலைத்து விடலாம் என்று பாஜக திட்டமிட்டு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை நயினார் நாகேந்திரன் பேட்டி உறுதி செய்திருக்கிறது.அதிமுக பலவீனமாக இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த தேர்தலில் தென் தமிழகத்தில் சுமார் 1கோடிவாக்குகள்பதிவாகியிருந்தன. இதில், பாஜக கூட்டணி வாங்கின ஓட்டுகள் 23 லட்சம், அதிமுக கூட்டணி வாங்கி ஓட்டுக்கள் 18 லட்சம். அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாக வாங்கின ஓட்டுகள் 10, 10 லட்சம்தான். ரெண்டு பேருமே சேர்ந்தாலும் 20 லட்சம் ஓட்டுகளை மட்டும்தான் வாங்கினீங்க. திமுக 55 லட்சம் வாக்குகளை வாங்கியிருக்கிறது. எனவேதான் அதிமுக பலவீனமாக இருக்கிறது என்று கூறி வருகிறேன். இந்த பலவீனத்தை களைய வேண்டும் எனில், முதலில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்று உணர வேண்டும். அப்புறம்தான் அதை நாம் களைய முடியும். இதை உணர்ந்து அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ப்ரியன் கூறியிருக்கிறார். முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும். அதற்காக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன். இல்லையெனில் நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து, இதற்கான முயற்சியை நானே எடுப்பேன் என்றுகூறியிருந்தார். அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close