fbpx
Others

பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன்(வயது80 ) சிகிச்சைபலனின்றி காலமானார்..

La Ganesan hospital bjp1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் ஈடுபட்டு வந்த இல.கணேசன் பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அரசியல் ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளலாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார் இல.கணேசன். பின்னர் தமிழக பாஜக-வின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பாஜகவின் தேசிய செயலாளர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். பாஜகவில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசனை கடந்த 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேற்கு வங்கத்திற்கும் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு நாகலாந்துமாநிலத்திற்குஆளுநராகநியமிக்கப்பட்டார்.நாகாலாந்து மாநில ஆளுநர்இல.கணேசன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி இல.கணேசன் (80). அண்மையில் சென்னை வந்திருந்த நிலை​யில் வீட்​டில் அவர் கால் தவறி கிழே விழுந்​த​தில், அவரது தலையில் பலத்த அடி​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதையடுத்​து, சென்னை அப்​பல்லோ மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்ளிட்ட தலைவர்கள் அவர் விரை​வில் நலம்​பெற்​று, மீண்​டும் நல்ல உடல்​நிலைக்கு திரும்ப வேண்​டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இல.கணேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் இருந்து இல.கணேசனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.:​நா​காலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. இல.கணேசன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

.

Related Articles

Back to top button
Close
Close