fbpx
Others

பவானிசாகர் அருகே யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை……

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் , காமராஜ்நகரை ஒட்டி கொத்தமங்கலம் வனப்பகுதி உள்ளது.இங்குள்ள வனப்பகுதியில் மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. யானைகள் பவானி ஆற்றுக்கு தினசரி
தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை 5 ஒற்றைஆண் யானை காமராஜ் நகர் அருகே வந்து நின்றது. யானையை அடக்கும்பவானிசாகர் வனத்துறையினர் பட்டாசு வெடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். காமராஜ்நகர் மக்களும், வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்ட நிருபர் சுரேஷ் குமார்

Related Articles

Back to top button
Close
Close