fbpx
Others

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு..

பவானிசாகர், பிப்.7-  ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர்,கரூர்மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் இருந்து கடந்த மாதம் 15-ந்தேதி காலை 8 மணி அளவில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப் பட்டது.இந்த நிலையில் நேற்று கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக் காக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. காலை 8 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் மாலையில் வினாடிக்கு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close