fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

முழு ஊரடங்கின் போது வங்கிகள் 10 தினங்கள் தொடர்ச்சியாக செயல்படாது!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கிகள் ஜூன் 19, முதல் ஜூன் 28  வரை பத்து தினங்கள் தொடர்ச்சியாக செயல்படாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது.சென்னையில் மட்டும் 34 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை  மற்றும் அதை ஒட்டியுள்ள மூன்று மாவட்டங்களின் பகுதிகளில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த கால கட்டத்தில் வங்கிகள் கடைசி நாட்களான ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணிகள், போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close