Others
நீடாமங்கலம்–ஶ்ரீ சந்தான ராமர் சிறப்பு கும்பாபிஷேகம்.
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் சந்தான வரம் அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருக்கோயிலில் 14.09.2024 அன்று கோவில் கும்பாபிஷேகம் நாள் முன்னிட்டு சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு அனைத்து ஸ்வாமிகளுக்கு 108 கலசங்களில் தீர்த்தம் எடுத்து வர பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது மாலை விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்க பட்டது செயல் அலுவலர் இராஜேஸ்வரி ஆய்வாளர் ராசி கணக்காளர் பஞ்ச நாதன் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகிகள் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் கைங்கர்ய சபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.