நீடாமங்கலம் -சுற்றுச்சூழல் மேம்பாடுவிழிப்புணர்வு.பள்ளிகளில் தொடக்கம்.
சுற்றுச்சூழல் மாணவர் அமைப்பு பள்ளிகளில் தொடக்கம்
நீடாமங்கலம் 15 ஜூன்நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் , பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டும் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் பள்ளியில் சுற்றுச்சூழல் மாணவர் அமைப்பு ஏற்படுத்தி அவர்கள் மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதன் தொடர்ச்சியாக அரசு உயர்நிலைப்பள்ளி பெரம்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமையிலும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ரிசியூரில் தலைமை ஆசிரியர் வசந்தி தலைமையிலும் பல்நோக்கு சேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் துணைத் தலைவர்கள் ராஜா, செல்வராஜ் பொறுப்பாளர் கார்த்தி முன்னிலையில் சுற்றுச்சூழல் மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. நிகழ்வில் நெகிழி இல்லா பள்ளி வளாகம், மஞ்சள் பை பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு, காடுகளின் பயன்கள் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தி பள்ளி வளாகத்தில் நிழல் தரும் 5 மரக்கன்றுகள் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் நடப்பட்டன. மேலும் பொது மக்களிடம் சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு செய்வது என்றும் ,சுற்றுச்சூழலை பேணிக்காக்க மரங்களை அதிக அளவில் நடுவோம் என்றும் ,நெகிழி பயன்பாட்டை குறைத்திடுவோம், மஞ்சள் பையை பயன்படுத்திடுவோம் ,மழை நீரை சேகரித்திடுவோம் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்தனர்.அரசு செய்திகளுக்காக சுரேஷ் நீடாமங்கலம்