fbpx
RETamil NewsTrending Nowஇந்தியா

மதுபானத்துக்கு 70% கொரோனா வரி…! முதலமைச்சர் உத்தரவு…! அதிர்ச்சியில் மதுப்ரியர்கள்…!

Kejriwal Delhi Government fixes 70% Tax On Liquor

டெல்லி: மதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணத்தை டெல்லி அரசு நிர்ணயித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு வரும்  17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தளர்வுகளின் அடிப்படையில்  பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். சிலர் ஆரத்தி எடுத்து, தேங்காய் உடைத்து, இன்னும் பலர் பட்டாசுகள் வெடித்து மதுபானங்களை வாங்கிச் சென்று கொண்டாடினர்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகின. இந் நிலையில் மதுபானங்களுக்கு 70% சிறப்பு கொரோனா கட்டணம் விதிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி அரசு கூறி இருப்பதாவது: மதுபானங்களுக்கு சிறப்பு கொரோனா கட்டணமாக 70 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மதுபானங்களின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close