நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்கவேண்டும்…கட்சிகள்கண்டனம்…
: முத்தரசன் கண்டனம் கோவை ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிபிஐ கண்டனம் தெரிவித்துள்ளது.ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஓட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரைமன்னிப்புகேட்கவைத்தசம்பவத்திற்குவிடுதலைசிறுத்தைகள்கட்சி கண்டனம்தெரிவித்துள்ளது.இதுதொடர்பாகரவிக்குமார்எம்.பி வெளியிட்டுள்ள பதிவில்,“ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குளறுபடிகளை எடுத்துக் கூறினார்; உண்மைக்கு மாறாக ஏதும் கூறவில்லை.நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைத்து அதை வீடியோ எடுத்து இன்றுஊடகங்களில்பரப்புகின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அன்னபூர்ணா ஓட்டல் எதிரே நாளை மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார். நிர்மலா சீதாராமனுக்கு ஜோதிமணி எம்.பி கண்டனம்- நிர்மலா சீதாராமனிடம், அன்னபூர்ணா உணவக உரிமையாளர், மன்னிப்பு கேட்ட சம்பவத்திற்கு ஜோதிமணி MP கண்டனம்
தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும் விமர்சித்துள்ளார்.▪️. அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார், மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 
கேள்வி கேட்பவரை மிரட்டுவது எதேச்சதிகாரம் – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
ஓட்டல் உரிமையாளர் கேள்வி கேட்ட வீடியோ வெளியானதும் பலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பாஜகவுக்குஎரிச்சல் நிதியமைச்சரிடம் கோரிக்கை வைப்பது என்பது வழக்கமான ஒன்றுதானே? கேள்வி கேட்பவரை மிரட்டுவது, வாயை அடைப்பது, மன்னிப்பு கேட்கச் செய்வது என்பது எதேச்சதிகாரம்மேலிருந்து அடிமட்டம் வரை தொடரும் பாஜகவினரின் ஆணவம் வன்மையான கண்டனத்துக்குரியது- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.