fbpx
Others

நிகிதாவின் புகார் காரணமாகவே அஜித் குமார் கொலை… .

JP Nikitha, Who Accused Watchman Ajith Kumar of Theft, Named In 2011  Cheating Case - Oneindia News
: நிகிதா என்பவர் வேலை மோசடியில் மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, நிகிதாவால் பாதிக்கப்பட்ட திருமாறன் என்பவர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அவர் அளித்த பேட்டியில், நிகிதா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “நிகிதாவை எனக்கு 21 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். திருமண மோசடியில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன். நிகிதாவுடன் ஒரு நாள் தான் என்னோட திருமண வாழ்க்கை. ஆனால் பல லட்சம் அவர் ஏமாற்றி விட்டார்” என்று திருமாறன் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், “அவர் என்னிடம் 20 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார். அவரின் அப்பா என்னிடம் 10 லட்சம் வாங்கிவிட்டுத்தான் விவாகரத்து கொடுக்கவே ஒப்புக்கொண்டார். அவர் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம். தாலி கட்டிட்டு ஒருநாள் வாழ்வார்… அதன்பின் வேறு எங்காவது ஓடி போயிட்டு வரதட்சணை கேஸ் போடுறது தான் நிகிதாவுக்கு வேலை. இதை வைத்து பல முறை ஏமாற்றி உள்ளார்” என்று நிகிதாவால் ஏமாற்றப்பட்ட திருமாறன் தெரிவித்துள்ளார்.Next Stay மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் இருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிகிதா மீது ஏற்கனவே பலகுற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு முன்பே வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் மோசடி செய்துள்ளார் நிகிதா. அப்படி மோசடி செய்ததோடு இல்லாமல், தலைமறைவாகியுள்ள உள்ளார். திருமங்கலத்தில் நிகிதா தலைமறைவாக இருந்தபோது, வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், “கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கிறீர்களா? கொன்று விடுவேன் என்று நிகிதா மிரட்டியதாக” தெரிவித்தனர். 2011ஆம் ஆண்டு நிகிதா மீது திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டார். ஆலப்பட்டியில் உள்ள தனது வீட்டை கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் விற்க முயன்று 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும், மற்றொரு நபரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. அஜித் குமார் மரணத்திற்கு காரணமான நிகிதா: விசாரணை தீவிரம் நிகிதா இதுவரை சுமார் 65 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் அணிந்திருக்கும் நகைகள் கூட, மோசடி பணத்தில் வாங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நகைகள் திருடு போனதாகக் கூறி, அதன் மூலம் மிரட்டி பணம் பறிக்க நிகிதா திட்டமிட்டிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நிகிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாமல், இத்தகைய மோசடிகளை செய்திருக்க முடியாது என பலர் கருதுகின்றனர். இந்த மோசடிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. நிகிதாவின் மோசடிநடவடிக்கைகள்திருமங்கலம்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அஜித் குமார் மரண வழக்கு இந்த நிகிதாவின் புகார் காரணமாகவே அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார்மர்மமானமுறையில்உயிரிழந்தார்.காவல்துறையினர்தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜித் குமாரின் மரணத்திற்கு நிகிதாதான் காரணம் என்று கூறப்படுகிறது. அஜித் குமார் மரண வழக்கில், இளைஞர் காவல்துறையினரின் விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நிகிதா அளித்த புகாரின் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மொத்தத்தில், நிகிதாவின் நடவடிக்கைகள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இந்த வழக்குகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close