நாளை வழக்கம் போல் மதுரை-ராமேஸ்வரம் ரயில்கள் இயங்கும்…..
மதுரை-ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிக்காக பகல் நேரங்களில் நிறுத்தப்படும் ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் ரயில்பாதை மின் மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது. தற்போது மின்சார இன்ஜின் கொண்ட ரயிலை அதிவேகமாக இயக்குவதற்கான மேம்பாட்டு பணிகளை தெற்குரயில்வேசெய்துவருகிறது.இதுதவிரபரமக்குடி,சத்திரக்குடி,ராமநாதபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 12 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56724)ரத்து செய்யப்பட்டு 3.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.அதேபோல திருச்சிராமேஸ்வரம்ரயில்(வண்டிஎண்:16849)மானாமதுரைவரைஇயக்கப்படுகிறது.மறுமார்க்கத்தில்மானாமதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறது. இந்த நிலையில், நாளை (ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.