fbpx
Others

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்.. குடியரசுத்தலைவர் உரையுடன் நாடாளுமன்றம் இன்று  கூடுகிறது! | Parliament Session on Budget Begins with President Droupadi  Murmu's Address - Tamil Oneindia

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதில் இரு அவை உறுப்பினர்களும் கூட்டாக பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இந்த கூட்டத்தொடரானது ஏப்ரல் 2ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முடற்கட்ட கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 13ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இரண்டாவது கட்டம் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நீள்கிறது. இதனிடையே, வரும் பிப்ரவரி 1ம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையைம் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்கிறார். இது அவரது 9வது நிதிநிலை அறிக்கையாகும். அதோடு, இந்திய வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 30 அமர்வுகள்திட்டமிடப்பட்டுள்ளன.  இதனிடையே வெளியாகியுள்ள தகவலின்படி, கூட்டத்தொடரின் போது மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியது, சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான விவாதங்களை முன்னெடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உத்தி குழு செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கூடியது . உறுப்பினர்கள் VB G RAM G சட்டம் மற்றும்SIRஉள்ளிட்டமுக்கியபிரச்சினைகள்குறித்துவிவாதிக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. அப்போது தொடர்ந்து மூன்றவாது முறையாக ஆளுநர் ஆர். என். ரவி உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதேபோன்று எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், அரசின் உரையை அம்மாநில ஆளுநர்கள் புறக்கணித்தனர். இதனால் மாநில நிர்வாகத்திற்கு ஆளுநர்கள் அவசியமா? எனஅரசியல்கட்சியின்கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.ஆளுநர்களின்செயல்பாடுதொடர்பாகமுதலமைச்சர்ஸ்டாலின்   வெளியிட்ட அறிக்கையில், “ முதலில் தமிழ்நாடு. பின் கேரளா. இப்பொழுது கர்நாடகா. இந்த நடைமுறை மிகவும் தெளிவானது மற்றும் திட்டமிடப்பட்டது. மாநில அரசுகள் தயாரித்துக் கொடுக்கும் உரையைப் படிக்க மறுப்பதன் மூலமும், கட்சி முகவர்களைப் போலச் செயல்படுவதன்மூலமும்,மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டமாநிலஅரசுகளைஆளுநர்கள்சிறுமைப்படுத்துகின்றனர்.நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதற்கு இருக்கும் ஒரே தீர்வு, ஆண்டின்முதல்சட்டமன்றக்கூட்டத்தொடரைஆளுநர்உரையுடன்தொடங்கும்நடைமுறைக்குமுற்றுப்புள்ளிவைப்பதுதான்.இந்தவழக்கற்றுப்போனமற்றும்தேவையற்றநடைமுறையைஒழிப்பதற்கானஅரசியலமைப்புச்சட்டத்திருத்தத்தை,அடுத்தநாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர,இந்தியாமுழுவதும்உள்ளஒத்தகருத்துடையஎதிர்க்கட்சிகளுடன்கலந்தாலோசித்துதி.மு.கநடவடிக்கை எடுக்கும்” எனதெரிவித்துஇருந்தார்.அந்தவகையில்சட்டப்பேரவைகளில் ஆண்டின்முதல்கூட்டத்தொடரை,ஆளுநர்உரையுடன்தொடங்கவேண்டும்என்றவிதியைதிருத்திஅமைப்பது  தொடர்பான மசோதாவை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து திமுக இந்த கூட்டத்தொடரில் முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும் இதற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Back to top button
Close
Close