fbpx
Others

நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டம்.

மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா-2025 வரைவு அறிக்கையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக, முழுமையாக வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த கோரியும், வழக்கறிஞர்கள் சேமநலநிதிக்கான முத்திரை கட்டண விலையினை ரூ. 30லிருந்து ரூ.120 ஆக உயர்த்தியதை மறுபரிசீலனை செய்து குறைக்க கோரியும் இந்த கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்ற வலியுறுத்தி, 28.02.2025 வெள்ளிக்கிழமை நம்முடைய நாங்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் ஜாக் மாநில துணைத்தலைவர் திரு சுப்பையா அவர்கள் உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார் ஜாக் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் அரசு வழக்கறிஞர் மாரியப்பன் முன்னிலை வைத்து கண்டனப் பேருரை நிகழ்த்தினார்., சங்கச் செயலாளர் என் ரமேஷ் வரவேற்று பேசினார் சங்க பொருளாளர் அழகிய நம்பி நன்றியுரை கூறினார் வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் மணிகண்டன் இணைச் செயலாளர் சுதர்சன் மூத்த வழக்கறிஞர்கள் பேச்சு முத்து அருமைராஜ்.முருகன்,பொன்னுதுரை,சாமுவேல்பிரின்ஸ்,குறிப்பாகஇளம்வழக்கறிஞர்கள்  தங்கேஸ்வரன் சங்கர் சுதாகர், ராஜா, இந்திரகுமார் ,உள்பட பல இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் மிக சிறப்பாக தங்களது கருத்துக்களை உறுதியோடு/ வலிமையுடன் கருத்துக்களை எடுத்துரைத்து பேசினார்கள். உண்ணாவிரகத்தின் முடிவில் ஜாக்கினுடைய மாநில துணைத்தலைவர் சுப்பையா அவர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் அவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு செய்து வைத்தார், இறுதியாக வழக்கறிஞர் சங்க பொருளாளர் அழகிய நம்பி நன்றியுரை கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close