fbpx
Others

நவீன் பட்நாயக் — விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல.

மக்களவைத் தேர்தலுடன் இணைந்து ஒடிசாவில் சட்டப்பேரவைக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஒடிசாதேர்தலுக்காக பாஜக தலைவர்கள் அதிக அளவில் அங்கு குவிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா5 முறை முதல்வர்; 24 வருட ஆட்சி! பாஜகவுக்குச் சரியான எதிரி? சைலண்ட் நாயகன் நவீன் பட்நாயக்! உள்ளிட்டோர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரம் என்று கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, ஒடிசாவை தமிழர் ஆள்வதா என பாஜக தலைவர்கள்பிரச்சாரம்செய்தனர்.இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றது. ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. பாஜகவுக்கு அடுத்தபடியாக ஆளும் பிஜு ஜனதா தளம் 51 இடங்களைப் பிடித்தது. மேலும் காங்கிரஸ் கட்சி 14 இடங்களைக் கைப்பற்றியது. லோக்சபா தொகுதிகளில் ஒரு இடத்தைக் கூட பிஜேடி கட்சியால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது. விரைவில் ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வரைத் தேர்வு செய்ய உள்ளனர். ஒடிசா சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, 24 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பிஜு ஜனதா தளம் 5 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்துள்ளது. தோல்வியையே சந்தித்திராத நவீன் பட்நாயக், தொடர்ந்து 24 ஆண்டுகள் 90 நாட்கள் ஒடிசா மாநில முதலமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக நவீன் பட்நாயக்கின் சாம்ராஜ்ஜியம் சரிந்துள்ளது. தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிஜேடியில் முன்னிறுத்தப்பட்ட விகே பாண்டியன் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், “வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசு யார் என்பதை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்.” என விளக்கம் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “பிஜேடி தோல்விக்கு வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே. பாண்டியன் கடுமையான உழைப்பாளி. கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா கால கட்டத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை- நவீன் பட்நாயக் திட்டவட்டம்! அடுத்த தலைவர் குறித்தும் பரபர அதற்காக அவர் மதிக்கப்பட வேண்டும். நவீன் பட்நாயக்கிற்கு “கொடுங்கனவாக” மாறிய பாஜக.. முதல் தோல்வி.. 5 முறை முதல்வர் ஆட்சியை இழந்தார்! விகே பாண்டியன் எனது கட்சியில் சேர்ந்தார், ஆனால் எந்த பதவியையும் வகிக்கவில்லை. நான் எப்போதும் என் வாரிசு பற்றிய கேள்விக்கு, விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என்று தெளிவாக சொன்னேன். இப்போது நான் மீண்டும் சொல்கிறேன், விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல. என் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடந்த மாதம் முழுவதும் நான் கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்ததை பார்த்திருப்பீர்கள்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அவர் நவீன் பட்நாயக்கின் தனிசெயலாளராகவும் பணியாற்றினார்.ஒடிசா: 78 இடங்களை கைப்பற்றியது பாஜக.. 24 ஆண்டு கால ஆட்சியை இழந்தார் நவீன் பட்நாயக்! பாண்டியனின் பணிகளால் கவரப்பட்ட நவீன் பட்நாயக், அவரை ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெறச் செய்து தனது கட்சியில் இணைத்துக் கொண்டார். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதால் விகே பாண்டியன் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கட்சிக்காக தீவிரமாகப் பணியாற்றினார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது பிஜேடி தோல்வியைத் தொடர்ந்து கட்சியினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில், நவீன் பட்நாயக், விகே பாண்டியனை விமர்சிப்பது சரியல்ல எனக் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close