fbpx
Others

நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை . . .?

நெல்லைமாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் நத்தம் குடியிருப்பு பகுதியின் நடுவே முள்வேலி அமைத்து கல்லறை மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
      நெல்லை மாவட்டம், இராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை பகுதி-2 கிராமத்திற்கு உட்பட்ட கொட்டா விளை என்ற ஊர் உள்ளது. இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 35 வருட காலமாக சென்னையில் வசித்து வந்து தற்போது மேற்படி கிராமத்திற்கு வந்த சுடலையாண்டி குமாரர் பாலாஜி என்பவர் தனது தந்தையின் கல்லறை மண்டபத்தை குடியிருப்பு பகுதியின்  நடுவே கிராம கணக்கின்படி அ. புறம்போக்கு புல எண் 1631/5ல் உள்ள காலிமனை நிலத்தில் முள்வேலி அமைத்து நடுவே மிகப்பெரிய அளவில் கல்லறை தோட்டத்தை அமைத்துள்ளார். இது சுற்றி வசித்து வரும் கிராம மக்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.இரவு நேரத்தில் மேற்படி இடத்தை கடந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள். இது சம்பந்தமாக துறை சம்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக கிராம அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு பொது மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாக உடனடியாக ஸ்தலப் பார்வையிட்டு அரசு நத்தம் காலிமனையில் அமைக்கப் பட்டுள்ள கல்லறையை அகற்றி மக்களின் மரண பயத்தை போக்க வேண்டும் என்பதே  அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பு… அரசு நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Back to top button
Close
Close