fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை உபயோகம் அதிகரிப்பு !

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வேலூரில் உள்ள வெல்மா மகளிர் குழுவினர் இந்த பைகளை தைய்த்து வருகின்றனர்.தற்போது இந்த துணி பைகளுக்கான ஆர்டர் அதிகரித்துள்ளதால் வெல்மா மகளிர் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் இது தொடர்பாக மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி போன்ற அனைத்துத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான மளிகைக்கடை, ஓட்டல், மட்டன் சென்டர், சிக்கன் சென்டர் என பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளது.

இவ்வாறு பிளாஸ்டிக் பைகளின் தேவை குறைந்துள்ளதால் துணி பைகளின் தேவை அதிகரித்துள்ளது.எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள வெல்மா மகளிர் குழுவினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் அளவில் ஆர்டர் சென்று குவிவதால் அவர்கள் உச்சகமடைந்துள்ளனர்.

இது குறித்து வேலூர் மகளிர் திட்ட அலுவலர் சிவராமன் கூறியதாவது;

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் வெல்மா மகளிர் சுய உதவி குழுவினர் பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் துணி பைகளின் தேவை அதிகரித்துள்ளது. வெல்மா மகளிர் குழுவினர் இந்த துணி பைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு பெரும் அளவில் ஆர்டர் சென்று குவிவதால் அவர்கள் உச்சாகமடைந்துள்ளனர். கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு 100 முதல் 200 வரை துணி பைகள் தயாரிக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது 500 முதல் 1000 வரை துணி பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் துணிப்பைகள் அதன் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.அவர்களுக்கு பெரும் அளவில் ஆர்டர் சென்று குவிவதால் அவர்கள் உட்சாகமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close