இராணிப்பேட்டை–தொழிலதிபர் சக்திவேல் குமாரின் பிறந்தநாள்…

தொழிலதிபர் சக்திவேல் குமாரின் பிறந்தநாள் முன்னிட்டு வாலாஜாவில் மாபெரும் ரத்ததான முகாம் …..
மாவட்டம் வாலாஜா அடுத்த வனிவேடு ஊராட்சியை சேர்ந்த தொழிலதிபரும் வன்னிவேடு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான V. C. சக்திவேல் குமாரின் 58 வது பிறந்த நாளையொட்டிபொதுமக்கள் படைசூழ58 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து வன்னிவேடு ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ரத்தம் சேகரித்து ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனர் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்தம் ஆர்வமுடன் வழங்கினர் மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வாலாஜா நகர காவல் ஆய்வாளர் ஜி. சாலமன் ராஜா, மத்திய அரசு வழக்கறிஞர்எம்.ரவிச்சந்திரன்,தொழிலதிபர் டாக்டர் அக்பர் ஷரீப், டாக்டர் கணேஷ், மற்றும் அப்துல் கரீம்ஆகியோர்சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும் ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது…