தொகுதி பங்கீடு திமுக குழப்பம்….?
கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துவதற்காக திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு வலிமையான குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழுவில் திமுகவின் முக்கிய தலைவர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..இந்தத் தேர்தல் களத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட ஆலோசனையை நடத்துகிறது.. முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தக் கூட்டணியில் ஒற்றுமையும் பொதுவான நோக்கமுமே மிக முக்கியமானது என்று வலியுறுத்தியிருந்தார்..எனினும், கமல் கேட்கும் எண்ணிக்கையை விட, திமுக தான் தோல்வியடைந்த தொகுதிகளில் சிலவற்றை மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளது.. ஏற்கனவே உள்ள கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து மநீம-விற்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.. எனவே, இரு தரப்பிற்கும் பொதுவான ஒரு உடன்பாடு எட்டப்பட்ட பிறகே கமல் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது உறுதியாகும்..புதிய கட்சிகளின் வரவு காரணமாக, பழைய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் சில மாற்றங்களை செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.. கடந்த 2021 தேர்தலை விட மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை குறைத்து ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. இவ்வாறு குறைக்கப்படும் தொகுதிகளைப் புதிய வரவான தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்குப் பிரித்து வழங்கத் தலைமை ஆலோசித்து வருகிறது..குறிப்பாக, கடந்த தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, தான் தோல்வியடைந்த சில தொகுதிகளை இந்தக் கட்சிகளுக்கு வழங்க முன்வந்துள்ளது.. அதேவேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறையைவிட ஒரு தொகுதி கூடுதலாக வழங்கி மொத்தம் 7 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே 25 தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளது.. மற்ற சிறிய கட்சிகள் கூட்டணியில் இணையும் பட்சத்தில், அவர்கள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. தொகுதிப் பங்கீடு குறித்த இந்த ஆரம்பகட்ட நகர்வுகள் கூட்டணிக்குள் விவாதங்களைஏற்படுத்தினாலும், தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறது.. இன்று என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்…!!