தேர்தல் சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றமா….?
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் சமயத்தில் அவர் மாற்றப்படுவதாக வந்துள்ள தகவல் அரசியல் ரீதியாகவும் கனவம் பெற்றுள்ளது.தமிழகம், மேற்கு வங்கம், புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனால் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இதற்கு மத்தியில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு முன் அவர் ராஜினாமா செய்வது கவனம் பெற்று இருக்கிறது. இதுமட்டுமின்றி காலியாக உள்ள மேற்கு வங்க ஆளுநர் இடத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.இதன் மூலம் தமிழகத்திற்கு புது ஆளுநர் நியமிக்கப்படுவாரா அல்லது ஆளுநர் ரவிக்கு கூடுதலாக மேற்கு வங்க ஆளுநர் பதவியும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸ் ராஜினாமா செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டதாவது:- “மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்ததுடன் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் ராஜினாமாவிற்கான காரணங்கள் இந்த நேரத்தில் எனக்கு தெரியவில்லை.மத்திய உள்துறை அமைச்சர், ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று எனக்கு தெரிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் நிலவும் நடைமுறைக்கு ஏற்ப என்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உத்வேகத்தை பாதிப்பதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே பாதிக்கின்றன. மத்திய அரசு கூட்டாட்சி ஒத்துழைப்பு என்ற கொள்கையை மதித்து, மாநிலங்களின் மரியாதையையும் ஜனநாயக மரபுகளையும் பாதிக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை தவிர்க்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல்கள் நீடித்து வருகின்றன. தமிழக அர்சு நிறைவேற்றி அனுப்பும் திட்டங்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டையாகவே இருந்து வருகிறார் என தமிழக அரசு கூறி வருகிறது. ஆளுநர் ரவி மாற்றப்பட்டால், திமுக அரசுக்கும் – ஆளுநருக்கு இடையே இருந்து வரும்மோதல்போக்குமுடிவுக்குவரும்எனவும்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மாற்றப்படுவாரா அல்லது கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா செய்தது, தமிழக ஆளுநர் மாற்றப்படுவது உள்ளிட்டவை அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.