தேனி–வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா..
தமிழ்நாடு – தேனி மாவட்டம்,வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை !!! தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா – மரியாதை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் !
வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா வருகிற 15.04.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய திருவிழாக்கள் 06.05.2025 முதல் 13.05.2025 வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.இவ்விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும், அம்மன் அருளைப் பெறுவதற்கும் வருகிறார்கள். எனவே, விழாவின் புனிதத்தன்மை மற்றும் பாரம்பரிய மரியாதைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.ஆனால், இந்த ஆண்டிற்கான ஏற்பாடுகளில், கோவில் வளாகத்தில் மற்ற நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் முறையில் தோரணம் இல்லாமலும் ,வேப்பிலை தோரணங்கள் கட்டப்படாமல் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் புணர்ச்சியடைந்து,கோவில் மரியாதைக்கு குறை வந்துவிடுமோ? என்றும்சாமி குத்தம் வரும் நிலை ஏற்படுமோ?என்ற அச்சத்தில்உள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு, வீரபாண்டி செயல் அலுவலர் மற்றும் விழா ஏற்பாட்டு குழுவினர், வழக்கம்போல் வேப்பிலை தோரணம், மரியாதைக்குரிய அலங்காரங்கள், மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும் என இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்துகிறது.எனவே, உரிய அதிகாரிகள் இவ்விசயத்தை பரிசீலித்து, விரைவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென க.இராமராஜ் – மாவட்ட தலைவர் , தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று கோரிக்கைவைக்கின்றனர்………..ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி