தேனி மாவட்டம் சின்னமனூரில் மாபெரும் ரத்ததான முகாம்….

சின்னமனூர் ரோட்டரி சங்கம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் தேனி மாவட்டம் சின்னமனூரில் தனியார் சமுதாய மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள், பொதுமக்கள்,மன்ற நிர்வாகிகள் மற்றும் ரோட்டரி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.இந்த ரத்த தானத்தில் ரோட்டரி சங்க ப்ராஜெக்ட் சேர்மன் செல்வகுமார் மற்றும் முதன்மை விருந்தினர் செல்வராஜ் மனிதநேய மருத்துவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பாஸ்கரன் ரோட்டரி மாவட்ட ஆலோசகர் மற்றும் சிவக்குமார் தலைமை மருத்துவ அதிகாரி பாரதி பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்னிலையில் இந்த ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் ஆர்வமாக கலந்து கொண்டு இந்த முகாமை மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவுக்கு எல் கே சிவமணி மாவட்ட வழிகாட்டி துர்கா வஜ்ரவேல் ,இந்தியன் ரெட் கிராஸ் தியாகராஜன், மகாராஜன் சுருளி வேல், ராஜேந்திரன், ஜெயவீரன்,மற்றும் ரோட்டரி சங்க செகரட்டரி குடியரசன் ,ரமேஷ், மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பு நிருபர்தேசநேசன் ஜெய ஹரிஹரன்.