தேனி–ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு..
நேற்று 31.07.2025 முத்துத்தேவன்பட்டி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) எஸ். சண்முகவேல் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ரெட் கிராஸ் மையத்திலிருந்து வருகை தந்த நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.எஸ்.மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.அட்மின் செயலர் திருமதி. மீனாம்பிகை அவர்கள் கருத்துரை வழங்கினார்.60 மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சார்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பள்ளிகளில் ஜே.ஆர்.சி. துவங்கும் முறை, செயல்பாடுகள்,பாடல்கள் கைத்தட்டல்கள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பு சார்ந்த தலைப்புகளில் கருத்தாளர்கள் பயிற்சிகளை வழங்கினார். ஆண்டிபட்டி செய்தியாளர் வேல்முருகன்




