fbpx
RETamil Newsஉலகம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1350 – ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1350 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தின் டோங்கலா நகரை மையமாகக் கொண்டு கடந்த 28-ந் தேதி பயங்கர நில நடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடலோர நகரமான பலுவில் சுனாமி ஏற்பட்டது. அலைகளின் உயரம் 20 அடிக்கும் அதிகமாக எழுந்ததால் அதன் பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் அதன் தீவிரம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நகரத்தை சேர்ந்தவர்களை சுனாமி அலைகள் வாரிக்கொண்டு போயின. கட்டிடங்கள் தரை மட்டமாகின. பாலங்கள் தகர்க்கப்பட்டன. சாலைகள் பிளவுபட்டன. கார், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், சுனாமி பாதிப்பைப் பயன்படுத்தி வீடுகளிலும், கடைகளிலும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. மற்றொருபக்கம் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உணவுப்பொருட்களும், குடிநீரும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். மின்சார வினியோகம் இல்லை. தகவல் தொடர்பு வசதி முடங்கிப்போய் உள்ளது. சாலைகள் சீர் செய்யப்படவில்லை. போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது.

இதனிடையே நேற்று 1,234 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 1,350 ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில், சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்புப் பணிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தோனேசியா வெப்ப மண்டலம் என்பதால் சடலங்கள் வேகமாக அழுகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close