fbpx
RETamil News

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு – அதிகஅளவு கொரோனா பதித்துள்ள பகுதி

நாளை முதல் சென்னையில் உள்ள அனைத்து இறைச்சி கடைளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவால் பதிப்படைந்துள்ள நபர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளின் பட்டியலை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி இயக்கப்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பிராட்வே, ராயபுரம் , புதுப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை, புரசைவாக்கம் பகுதிகளை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை , மாம்பலம் ஆகிய இடங்களில் 6 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசரர்பாடி , தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய இடங்களில் 5 பேருக்கும் , தேனாம்பேட்டை மண்டலத்திற்க்கு உட்பட்ட சாந்தோம், கோடம்பாக்கத்தில் 4 பேரும் கொரோனாவால் பதிப்படைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி பட்டியலிட்டு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இறைச்சி கடைகள் இயக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close