தேனிஅல்லிநகரம்–ELITES, நண்பர்கள் மாணவர்களின் சங்கமம்!
தேனிஅல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள கிரீன் கார்டனில் தேனி NSHS – 77 -78 ELITES மாணவர்களின் சங்கமம்!!! தேனி மாவட்டம், தேனியில் இன்று 22/02/2025 , சனிக்கிழமை காலையில் 10.00 மணியளவில் அல்லிநகரம் – வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலையில் உள்ள ” Green Garden ” -ல் NSHS – 77 – 78 ELITES, நண்பர்கள் சந்திப்பு கூட்டம் வெகு சிறப்பாக சுமார் எழுபது நண்பர்கள் கலந்து கொள்ள, காலை தேநீர் மற்றும் வடையுடன் கூட்டம் துவங்கியது.இக்கூட்டத்தில் தங்களுடன் பயின்று காவல்துறை அதிகாரிகளாகவும், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றிய அவரவர்களின் பல்வேறு வகையான அனுபவங்களையும், சில நண்பர்கள் வணிக நிறுவனங்கள் நடத்தியும் தாங்கள் கடந்து வந்த ஒவ்வொரு நகர்வுகளையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர், இவற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தேனி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் மிக நவீனமயமான மின் தகன வளாகம் ஏற்படுத்துவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் இது சம்பந்தமான துறையினரை அணுகி விரைவில் இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்வது பற்றியும் கலந்து பேசிய பின்பு, இந்த நண்பர்கள் சங்கமத்தில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் அறுசுவையான மதிய உணவுகள் பரிமாறப்பட்டது. பின்னர் உணவு இடைவேளைக்குபின் மீண்டும் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் அவரவர்களின் அறிமுகத்துடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.. பின்பு மாலை தேநீர் மற்றும் ஸ்நாக்ஸ் உடன் நண்பர்களின் சந்திப்பு கூட்டம் இனிதே நிறைவுற்றது…..நண்பர் கேப்டன் முருகேசன் மற்றும் சிவானந்த ராஜா, பாலமுருகன், செந்தில் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைமிகவும்சிறப்பாகசெய்திருந்தனர்……அன்புடன் – ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.