தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது…?
1906 முதல் 1947 வரை.. இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகள்.. எந்தெந்த வடிவத்தில் இருந்தது தெரியுமா?
இந்திய சுதந்திரத்திற்கு முன் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடிகளின் வடிவங்கள் எப்படி இருந்தது என்பதை இந்த சுதந்திர நாளில் பார்ப்போம்.
முதன் முதலில் தேசிய கொடி ஏற்றப்பட்ட நாள் ஆகஸ்ட் 7ம் தேதி 1906ம் ஆண்டாகும். கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் இந்திய நாட்டின் முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடியில் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள்
பயன்படுத்தப்பட்டன
முதல் தேசிய கொடியை தொடர்ந்து 1907ம் ஆண்டு இரண்டாவது முறையாக கொடி மறுவடிவம் பெற்றது. 1907ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி மறுவடிவம் பெற்ற இந்திய தேசிய கொடி, ஜெர்மனியில் நடைபெற்ற சர்காதேஷ சோசியலிச கூட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது.
மூன்றாவது முறையாக இந்திய தேசிய கொடி மறுவடிவம் பெற்றது. டாக்டர் அன்னை பெசன்ட் மற்றும் பால கங்காதர் திலகர் இணைத்து 1917ல் கொடியை வடிவமைத்தனர். சிவப்பு, பச்சை மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த கொடியாக மறுவடிவம் பெற்றது.
தொடர்ந்து நான்காவது முறையாக 1921ம் ஆண்டு இந்திய தேசிய கொடி மீண்டும் மறுவடிவம் பெற்றது. வெள்ளை, பச்சை, சிவப்பு நிறங்கள்இடம்பிடித்திருந்தது.வெள்ளைஅமைதியையும், பச்சை இஸ்லாமிய மதத்தினரையும், சிவப்பு இந்து மதத்தினரையும் குறிக்கும் வகையில் வடிவாக்கப்பட்டு. கொடியின் மையப்பகுதியில் நெசவு சக்கர ராட்டினம் இடம் பிடித்திருந்தது.
ஐந்தாவது முறையாக 1931ம் ஆண்டு தேசிய கொடி மீண்டும் மறுவடிவம் பெற்றது. காவி நிறம், வெள்ளை, பச்சை நிறத்தில் கொடி வடிவமைக்கப்பட்டது, கொடியின் நடுவே நெசவு சக்கரம் இடம் பிடித்திருந்தது. மேலும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ்தனதுராணுவத்திற்குஇந்தகொடியைபயன்படுத்திக்கொண்டார்.
இறுதியாக, 1947ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இந்திய கொடியில் இருந்த நெசவு சக்கரம் நீக்கப்பட்டு அசோக சக்கரம் வைக்கப்பட்டது. மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த மூவர்ண கொடி தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.