fbpx
Others

திருப்பூர்மாநகராட்சி செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மேயர் தினேஷ் குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர் பழைய பஸ் நிலையம்,தென்னம்பாளையம், தினசரி மார்க்கெட், சந்தைப்பேட்டை மீன் மார்க்கெட், நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆகிய இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என்று அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர் கண்ணப்பன், பொறியாளர் முகமது சபியுல்லா, மற்றும் உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம்,துங்காவி ஊராட்சியில்,வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறைகள் கலந்துகொள்ளும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பட்டாமாறுதல், சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பயிர் கடன் வழங்குதல்,மற்றும் சிறு குறு விவசாயிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்களின் விளை நிலங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஆணை பெறுதல் ஆகிய சிறப்புப் பணிகள் நடைபெற்றது.துங்காவி, மலையாண்டிபட்டினம், பாறையூர், சீலநாயக்கன்பட்டி, தாமரைபாடி, பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்தனர். இந்நிகழ்வில் துணைப்பதிவாளர், மற்றும் கூட்டுறவு துறை பி.மணி, ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், ஆகியோர் முன்னிலையில் வேளாண்மை மற்றும் கால்நடை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்பு துறை, கூட்டுறவு துறை, பால்வளத் துறை, மற்றும் கனரா வங்கி ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close