fbpx
Others

திருப்பத்தூர்–மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம்..

திருப்பத்தூர்: தோமினிக் சாவியோ நிதி உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு  மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு-பல போராட்டத்திற்குப் பிறகு பிரேத  பரிசோதனை கதறி அழுத தாய்திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் தேதி காலை வகுப்புக்கு வராத காரணத்தால் ஆசிரியர்கள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து தங்களது பிள்ளை வீட்டிற்கு வந்தாரா என கேட்டனர். இதனால் அதிர்ந்து போன பெற்றோர்கள் தங்கள் வீட்டுக்கு வரவில்லை என கூறியுள்ளனர்.அதன் பின்னர் கொத்தூரில் இருந்து பெற்றோர்கள் அவசர அவசரமாக பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையில் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படையை அமைத்து இரண்டு நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் உள்ள முகப்பு மூடப்பட்ட நிலையில் உள்ள கிணற்றில் ஒரு மாணவன் உடல் இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பத்தூர் நகர போலீசார் அந்த மாணவன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.விசாரணையில் அந்த உடல் காணாமல் போன மாணவன் முகிலன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அம்மாணவனின் உடலைபிரேதபரிசோதனைக்காகTirupathur crime police அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றின் மேல்பாகம் மூடப்பட்ட நிலையில் இருந்த கிணற்றுக்குள் மாணவன் சடலம் கிடந்தது எப்படி, மாணவனின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் மாணவர் உயிரிழப்புக்கு காரணமான பள்ளியை மூட வேண்டும், பள்ளியின் தாளாளரை கைது செய்ய வேண்டும், தனது மகன் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்எனபல்வேறுகோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை பெற்றோர் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மாணவன் முகிலனுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். மேலும் பாதிரியாரை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி இரண்டு நாட்களாக போராட்டத்தில் உறவினர்களை ஈடுபட்டு வந்த நிலையில், டிஐஜி மற்றும் எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து இன்று மாணவனின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாவது நாளான இன்று பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close