fbpx
Others

திருநெல்வேலி—-சத்தமின்றி நாங்குநேரியில் மாபெரும் தொழிபுரட்சி ….

69th National Awards: TN CM MK Stalin questions recognition for "The ...திருநெல்வேலி மாவட்டத்தில், நாங்குநேரிக்கு அருகில் இருக்கும் வறண்ட நிலப்பகுதி, தொழில் துறை நடவடிக்கைகளால் விரைவில் உயிரோட்டம் பெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாங்குநேரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நாங்குநேரி அருகே உள்ள 915.03 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.அரசு புறம்போக்கு நிலங்கள் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். மற்ற தனியார் நிலங்கள் பேச்சுவார்த்தைக்கு பின் வாங்கப்படும். இதற்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2,042.35 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த ₹871.86 கோடிஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நிலம்கையகப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.மார்ச் 2001-ல் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட நாங்குநேரி பல் பொருள் சிறப்பு பொருளாதார மண்டலம் படிப்படியாக தனது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்த நிலையில் கங்கை கொண்டானில் உற்பத்தி பிரிவுகளை வைத்திருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சிப்காட் தொழில் வளாகம் அமைவதை வரவேற்கின்றனர். முதலமைச்சரின் அறிவிப்பும் தொழில் வாய்ப்புகளும்: நாங்குநேரி சிப்காட் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை தந்தபோது, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டியில் சிப்காட் தொழில் பேட்டைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதனை அடுத்து, 826.86 ஹெக்டேர் தனியார் நிலம் மற்றும் 88.17 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் ஒரு இந்திய நிறுவனம் காலணி, விளையாட்டு காலணிகள் மற்றும் ஸ்னீக்கர்கள் தயாரிக்கும்sipcot madurai தொழிற்சாலையை இங்கு அமைக்க வாய்ப்புள்ளது. கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி செல்லும் நான்குவழிதேசியநெடுஞ்சாலைக்கு அருகில்இந்ததொழில்பூங்காஅமையவிருப்பதால்போக்குவரத்துஎளிதாகஇருக்கும்.ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சத்தமே இன்றி தொழிபுரட்சி ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. சென்னை, சூளகிரி, ராணிப்பேட்டை என்று பல பகுதிகளில் சத்தமின்றி நடக்கும் மாபெரும் தொழிற்புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மதுரையில் ஏற்கனவே சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மதுரைக்கு இரண்டாவது சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலுப்பக்குடி தொழில் பூங்கா 2026 ஆம் ஆண்டின் செயலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல தமிழ்நாட்டில் இரண்டாம் டயர் மாவட்டங்களில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் அமைக்கப்படும் சிப்காட் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் சிப்காட் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைய சிப்காட் மிகப்பெரிய காரணம் ஆகும்.அந்த வகையில் 8 இடங்களில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 8 புதிய SIPCOT பூங்காக்களை தமிழக அரசு அறிவித்துள்ளது: 1. ஸ்ரீபெரும்புதூர்- 750 ஏக்கர் 2. சென்னை ORR – 200 ஏக்கர் 3. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி – 1,000 ஏக்கர் 4. பெரம்பலூர்- 100 ஏக்கர் 5. திருவெறும்பூர், திருச்சி- 150 ஏக்கர் 6. கும்மிடிப்பூண்டி, சென்னை – 1,500 ஏக்கர் 7. அரியலூர்- 150 ஏக்கர் 8. மன்னார்குடி- 150 ஏக்கர் அதன் ஒரு கட்டமாக பின் வரும் நகரங்களை புதிய தொழில் பூங்காக்களின் அமைப்பை சிப்காட் அமைக்க தொடங்கியுள்ளது. 1. திருமுடிவாக்கம், சென்னை 2. தேனி (உணவு+ மல்டி பார்க்) 3. காட்பாடி 4. பணப்பாக்கம், ராணிப்பேட்டை 5. வாரப்பட்டி, கோயம்புத்தூர் 6. தருமபுரி 7. நாகப்பட்டினம் 8. பாடலூர், பெரம்பலூர் 9. விருதுநகர்- பி.எம்.மித்ரா டெக்ஸ்டைல்​​பார்க் 10. செங்காத்தாகுளம், திருவள்ளூர் 11. சிவகங்கை (2 கட்டங்கள்) 12. ஏ.சாத்தனூர் SEZ, கள்ளக்குறிச்சி 13. வைப்பார், தூத்துக்குடி 14. வேலாயுதபுரம், தூத்துக்குடி 15. மணக்குடி, ராமநாடு 16. சேலம் ஜவுளி பூங்கா 17. தலைவாசல், கள்ளக்குறிச்சி 18. சக்கரகோட்டை, ராமநாடு 19. மணல்லூர் (EV & EMC), திருவள்ளூர்..

Related Articles

Back to top button
Close
Close