திருச்சியில் பேசியநடிகர் விஜய்……?
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் உங்களுக்கும் எனக்கும் இருக்கின்ற இந்த பந்தத்தை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கரூர் துயரச் சம்பவம் ஜனநாயகம் உள்ளிட்ட விஷயங்களை கையில் எடுக்கிறார்கள் என்று பேசினார்.குறிப்பாக “அவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கொண்டு, உங்கள் விஜய் ஆன என்னை எப்படி
எல்லாம் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. இந்த கரூர் சம்பவம் சூழ்ச்சி என்று பலர் சொல்வதைப் போல், நமது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் பிரச்னை எனது மனதிற்கு நெருக்கமான உங்கள் எல்லோருக்கும் இருக்கின்ற பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னமும் இறுக்கமாக நான் மாற்றி விடுவேனோ என்றும், அது இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்றும் நினைத்து நடத்தப்பட்ட ஒரு கூட்டு சூழ்ச்சி. அத்தோடு இன்னும் பல பல சூழ்ச்சிகள் உள்ளன. அதனால் உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் விஜய் கேட்கிறேன், உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்து தான் நீதி வேண்டும்” என்று பேசி உள்ளார்.விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நக்கீரன் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கோபால், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ என்னை விசாரித்தால் நான் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்தார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் ராஜ்மோகன் கூறும் போது படப்பிடிப்பு நடக்கவில்லை அதற்கான ஒத்திகை மட்டும் நடைபெற்றது என்று கூறியிருந்தார். வெளிப்படை இல்லை: இந்நிலையில் திருச்சியில் பேசியநடிகர் விஜய் கரூர் துயர சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் உள்ளிட்டவை குறித்து பேசி இருந்தாலும் கரூர் துயரச் சம்பவத்தில் ஜனநாயகன்படத்திற்கான படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மேலும் சிபிஐயில் வழக்கு விசாரணையில் உள்ளதால் இது தொடர்பாக வெளிப்படையாக பேச வேண்டாம் என்று விஜய் நினைத்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது