Others
திமுக சாா்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரும் 25 ஆம் தேதிஎம்.பியாக பதவியேற்க உள்ளனர்.
தோ்தல்அதிகாரி சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.07.2025-ஆம் நாளன்று முடிவடைவதால்ஏற்படும்காலியிடங்களுக்குதிமுகசாா்பில் பி..வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம்தலைவா்கமல்ஹாசன்ஆகியோரும்,அதிமுகசாா்பில் தனபால்,ஐ.எஸ்.இன்பதுரைஆகியோரும்மாநிலங்களவைஉறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியிருந்தார்.இந்த நிலையில், கமல்ஹாசன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரும் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க போகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி, வரும் 25 ஆம் தேதி நான்கு பேரும் எம்.பியாக பதவியேற்க உள்ளனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி கூட உள்ளது.ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.