திமுகவுக்கு மிகப்பெரிய பலன்ஓபிஎஸ் இணைந்தது….
அதிமுக சார்பாக தமிழ்நாட்டின் முதல்வராக 3 முறை செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் மட்டுமல்லாமல் எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மகன் ரவீந்திரநாத் ஆகியோரும் திமுகவில் இணைந்திருக்கின்றனர். பாஜக கூட்டணியில் இணைய ஓபிஎஸ் காய் நகர்த்தி வந்த சூழலில், திடீரெனதிமுகபக்கம்சென்றதுஏன்என்றகேள்வி எழுந்தது.ஜெயலலிதா மறைவுக்கு பின் பாஜகவுடன் மிகவும் நெருக்கம் காட்டியவர் ஓபிஎஸ். டெல்லிக்கு சென்ற போது காவி வேட்டி அணிந்து சென்று பாஜகவினரை சந்தித்தார். அதேபோல் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மோடியின் புகைப்படத்துடன் கடிதத்தை வெளியிடுவார். அதேபோல் திமுகவுக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டுவிட்டு, எப்படி திமுகவில் இணைவது என்ற தயக்கமும் ஓபிஎஸ்ஸிடம் இருந்திருக்கிறது. ஆனால் அமைச்சர் சேகர்பாபு தொடர்ச்சியாக ஓபிஎஸ் தரப்பை சந்தித்து பேசி இருக்கிறார். திமுகவில் தகுந்த மரியாதை அளிக்கப்படும் என்று சேகர்பாபுநம்பிக்கைகொடுத்திருக்கிறார்.அதுமட்டுமல்லாமல்தேனிமாவட்டநிர்வாகிகளுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் உடன் நெருங்கி பணியாற்றி தங்க. தமிழ்ச்செல்வன் இன்று அண்ணா அறிவாலயத்தில் இருந்தார். 1999 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது அந்ததொகுதியின்பொறுப்பாளராகஓபிஎஸ்மற்றும்தங்க.தமிழ்ச்செல்வன் இணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டவர்கள். இதனால் தங்க தமிழ்ச்செல்வன் உடனடியாக அண்ணா அறிவாலயம் அழைக்கப்பட்டு, அவர் செய்ய வேண்டிய பணிகளை கொடுத்துள்ளனர். அதனை அவரும் கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.சட்டசபைத் தேர்தலின் போது தென் மாவட்டங்களில்எடப்பாடிபழனிசாமியின்பிரச்சாரத்தைமுறியடிக்கஓபிஎஸ்முன்னிலைப்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே முக்குலத்தோர் வாக்குகளை எடப்பாடி பழனிசாமி பெற முடியாமல் தடுமாறி வரும் சூழலில், ஓபிஎஸ்ஸை அவருக்கு எதிரான ஸ்டாலின் நிறுத்தி இருப்பது திமுகவுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்று தெரிகிறது.