Others
திங்களூர் அருகே காய்ச்சலால் பெண் சாவு

ஈரோடு மாவட்டம் கோபிசொட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் சுலைமான். இவருடைய மனைவி லட்சுமிகரீனா (வயது 50). சில ஆண்டுகளுக்கு முன்பு சுலைமான் இறந்துவிட்டார். இதையடுத்து லட்சுமி கரீனா கடந்த 3 மாதங்களாக அருகே நல்லாம்பட்டி பகுதியில் சென்னி (வயது 75) என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு லட்சுமி கரீனாவுக்கு காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது. இதனால் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஒருதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்தபோது, லட்சுமி கரீனா இறந்து கிடந்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிருபர் சுரேஷ்குமார்