fbpx
REஇந்தியா

6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் சொந்தஊர்களுக்கு சென்றனர்- இந்திய ரயில்வே

migrant workers travel back to home-indian railways

பிற மாநிலத்தில் தவித்து வரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்த்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அணைத்து மாநில அரசுகள் இதற்கென விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்தியன் ரயில்வே புலம்பெயர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஷராமிக் என்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில் மூலம் இதுவரை சுமார் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு கடந்த மூன்று நாட்களில் 2 லட்சம் பேர் ரயிலில் பயணித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில் 1074 ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் டெல்லி,ஆந்திரம்,ஹரியானா,குஜராத்,கோவா,பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக தண்ணீர்,உணவு முதலிவாயை வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து வருகின்றது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close