தலமலை, ஆப்பக்கூடல் பகுதிகளில் மது விற்ற 2 பேர் கைது..

ஆசனூர் அருகே தலமலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கர்நாடக மது விற்கப்ப டுவதாக ஆசனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆசனூர் போலீசார் தலமலை கிராமத்துக்கு சென்று, குறிப்பிட்ட வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வீட்டில்288கர்நாடகமதுபாக்கெட்டுகள்இருந்ததைபோலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்துவீட்டில்இருந்தவரைபிடித்துபோலீசார்விசாரணைநடத்தினர்.விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 42) என்பதும், அவர் கர்நாடக மாநில பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து மதுபாக்கெட்டுகளை வாங்கி வந்து தலமலை பகுதியில் விற்றவர், என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 288 மது பாக்கெட்டுக ளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆப்பக்கூடல் அத்தாணி அருகே உள்ள மது காட்டி பிரிவு சந்திப்பில் மது விற்பனை செய்ததாக திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தேனூர்பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர் இருந்து 16 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.