தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில்ஆலோசனைக் கூட்டம்.


உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பாக எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைக் கினங்க மாவட்ட செயலாளர் எஸ் டி கே சக்கையன் அறிவுறுத்தலின் படி ஒன்றிய செயலாளர் வினோத் குமார் தலைமையில் தம்மிநாயக்கன்பட்டியில் அஇஅதிமுக கிளை செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கிளை அமைப்பாளர்கள் சார்பணி சார்ந்த அமைப்பாளர்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கிளைகழக மற்றும் சார்பு அணிகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றிய செயலாளர் வினோத் குமார் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி அடைய செய்ய வேண்டும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி அடைந்தோமானால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார்தலைமையில் ஆட்சி அமையும் அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் திமுக அரசு பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது தற்பொழுது கூட அமைச்சர்கள் மாற்றம் செய்து உள்ளார்கள் இது எல்லாம் மக்களுக்கு நன்மை தருவதாக இல்லை ஆதலால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமக்கே என்று ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.இந்நிகழ்வில் ஜெயக்கொடி ஒன்றிய நிர்வாகிகள் தினேஷ் பகவதி செல்வகுமார் ஜான் போஸ்கோ சின்னத்துரை ரகுராம் மற்றும் கிளை கழக செயாளர்கள் உறுப்பினர்கள் மகளிர் அணியினரும் திரளாக கலந்து கொண்டனர் …..சிறப்பு நிருபர்நேசதேசன் ஜெ. ஹரி ஹரன்