RETamil Newsஇந்தியா

வெப்பநிலை எங்கு குறைகிறதோ அந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும்!

சென்னை:

வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா தீவிரமாக பரவும் சாத்தியம் அதிகம்  என சென்னை  ஐஐடி தகவல் வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கொரோனா வைரஸ் வெப்பநிலை குறைந்த இடங்களில் தீவிரமாக பரவுமா என்பது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு ஆய்வில் ஈடுபட்டது.

அதன் முடிவுகள் இப்பொழுது  வெளியிட்டப்பட்டு இருக்கிறது.

அதில், வெப்பநிலை மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று, கட்டுக்குள்  உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், செயற்கையாக விளக்குகள் மூலம் புற ஊதா கதிர் வீச்சை உருவாக்கினால் சமூக பரவலை தடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை மட்டும் ஆராய்ந்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது ஐஐடி.

உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பு நிரூபணம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close