தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் பேரவை கூட்டம்…
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜனலிஸ்ட் திருவள்ளூர் மாவட்ட பேரவை கூட்டம் செங்குன்றம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள நாரவாரிகுப்பம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர். வி. பி. கோவிந்தராஜுலு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் எம்.யுவராஜ், வி. அந்தோணி, மாவட்ட துணை தலைவர்.
கோ. ரமேஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர். கே. வெங்கடேஷ் வரலு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எம். ஏ. கருணாநிதி அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட பொதுச் செயலாளர். பெ.ரூபன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.கூட்டத்தில் மாநில தலைவர். பி. எஸ். டி. புருஷோத்தமன் சிறப்புரை ஆற்றினார்.மாநில பொதுச் செயலாளர்கள்.ஏ. சுரேஷ்,
கே. முத்து, மாநில பொருளாளர். வி. ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர். ஏ.தமிழ்செல்வம், மாநில அமைப்பு செயலாளர். பி. ஆர். வேளாங்கன், மாநில இணை செயலாளர்கள். ஆர். முருகக்கனி, ஏ.ஆர். லட்சுமணன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர். பி. தேவேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர். கல்யாணசுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக மாவட்ட பொருளாளர். என். முனுசாமி நன்றி கூறினார். மூத்தபத்திரிகையாளர். திருத்தணி புலவர். தேவராஜ், புழல் தமிழ் கொடி,ஊத்துக்கோட்டை நல்ல தம்பி, பெரியபாளையம் நாகராஜ்,பொன்னேரி ராதாகிருஷ்ணன், ஆவடி மணிமாறன், செங்குன்றம் முகமது அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


