fbpx
Others

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள்….?

anna university xyz தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வின் 3-ம் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், 43 ஆயிரத்து 338 மாணவர்கள் தங்களுக்கு விரும்பிய கல்லூரிகளில் தற்காலிக இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 993 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாக ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.இதுதவிர, 8 ஆயிரத்து 91 மாணவர்களுக்குத் தற்காலிகமாக கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களில், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டின் கீழ் 371 மாணவர்களும் அடங்குவர். தற்காலிக இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் நேரடியாகச் சென்று சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டும். அதே சமயம், தற்காலிகமாக ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்தஇடங்கள்காத்திருக்கும்மற்றமாணவர்களுக்குவழங்கப்படும்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியத் தேதிகள்:கல்லூரியில் சேர இறுதி நாள்: ஆகஸ்ட் 17, 2025 கட்டணம் செலுத்த இறுதி நாள்: ஆகஸ்ட் 17, 2025        தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025; இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கல்லூரிகளில் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன? கம்ப்யூட்டர் சயின்ஸூக்கு இணையாக மாணவர்களால் விரும்பப்பட்ட கோர்ஸ் எவை என்பது இங்கே   பொறியியல் மாணவர்சேர்க்கைக்கானமூன்றாம்சுற்றுதொடங்கியுள்ளநிலையில்,இரண்டாம்சுற்றில்கல்லூரிகளில் நிரம்பியுள்ள இடங்களின் விபரம் மற்றும் சிறந்த பாடப்பிரிவுகள் எவை என்பது குறித்துtamil nadu engineering admission இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.70 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள்விண்ணப்பித்தனர்.இதுவரை2சுற்றுகவுன்சலிங்நிறைவடைந்துள்ளது.இந்தநிலையில், இரண்டாம் சுற்றில் கல்லூரிகளில் நிரம்பியுள்ள இடங்களின் விபரம் மற்றும் சிறந்த பாடப்பிரிவுகள் எவை என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.இரண்டாம் சுற்றில் சுமார் 98565 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 53265 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் சரியாகசாய்ஸ் ஃபில்லிங் செய்யாமல், சீட் கிடைக்காத 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் சுற்றில்சீட்எடுத்துள்ளனர்.மொத்தம் உள்ள 172589 இடங்களில் இதுவரை 79894 இடங்கள் நிரம்பியுள்ளன. மூன்றாம் சுற்றுக்கு 92605 இடங்கள் உள்ளன. இரண்டாம் சுற்றில் கோர் இன்ஜினியரிங் படிப்புகள் அதிகமாக நிரம்பியுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு இணையாக கோர் படிப்புகள் நிரம்பியுள்ளன. மொத்தமுள்ள 423கல்லூரிகளில், 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. 148 கல்லூரிகளில் 10%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அதேநேரம் 56 கல்லூரிகளில் 90%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 148 கல்லூரிகளில் 50%க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன. 7 கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 276 கல்லூரிகளில் 50%க்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.

Related Articles

Back to top button
Close
Close