தமிழ்நாடு சிலம்பம் பேரவை சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!

முதல்வர் கோப்பைக் காண சிலம்பப் போட்டியில் நடந்த குளறுபடிகளை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
தமிழ்நாடு சிலம்பம் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!!! தமிழ்நாடு சிலம்பம் பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் ஹஸ்தினாபுரம் சிலம்ப பள்ளி அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்றது ! அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். சிலம்பச் செம்மல். கலை முதுமணி ஆர். முருககனி ஆசான் – மற்றும் தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர்
அண்ணாவி ஜெ. ஈசன் – தலைமை தாங்கினர்.கூட்டத்தில் முதல்வர் கோப்பைக் காண விளையாட்டுப் போட்டியில் இந்த வருடமும் சிலம்பத்தில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளன. சரியான முறையில் நடுவர்கள் தீர்ப்பு வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட போட்டியில் ஒரு மாணவியை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார் இது வேதனை அளிக்கிறது.முறையாக போட்டி நடக்கவில்லை மேலும் தொடுமுறை மட்டுமே சிலம்பத்தில் விளையாடப்பட்டது கடந்த முறை 4 பிரிவுகளில் விளையாட்டு நடைபெற்றது. அதை தொடு முறை மட்டுமே இருக்கும் படி யார் ஏற்பாடு செய்தது இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும்அரசுசார்பில்நடத்துகின்றசிலம்பபோட்டிகள்சரிவரநடத்தப்படுவதில்லை.. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் அரசு போட்டியை நடத்துகிறது.இது எந்த வகையில் நியாயம் இவைகளையெல்லாம் அரசுக்கு எடுத்து கூறும் வகையில் விரைவில் ஒரு பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.சிறப்பு விருந்தினராக மூத்த ஆசான் .கணபதி , அகில பாரத சிலம்பம் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர். எஸ். ரிஸ்வான் பாஷா ஆசான் மற்றும் மகாராஷ்டிரா சிலம்பம் பேரவை நிர்வாகி. சுரேஷ் கலந்து கொண்டனர்.அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும் சென்னை மாவட்ட சிலம்ப போட்டி அக்டோபர் மாதம் 12, 13 தேதிகளில் செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் நடைபெறும் சிலம்பப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் ராஜேந்திரன், நந்தகுமார் ,சரவணன், கஜேந்திரன், சண்முகப்பிரியா உள்பட தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் , கலந்து கொண்டனர்.