தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 5 ஆண்டுகளில் எப்படி செயல்பட்டது? விரிவாககீழே….
இன்னும் இரு மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டமன்றம் எப்படி செயல்பட்டது? என்பதை கீழே விரிவாக
காணலாம். 1. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றது எப்போது? 2021ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி 2. 16வது சட்டமன்றத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்தது எப்போது?2021ம் ஆண்டு ஜுன் 21ம் தேதி 3.16வதுசட்டமன்றகூட்டத்தொடர் நடந்த கடைசி நாள்எப்போது?2026ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி 4. 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தம் நடந்த நாட்கள் எத்தனை? 161 நாட்கள் 5. சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் காலையிலும், மாலையிலும் நடைபெற்றுள்ளது? 17 நாட்கள் 6. சட்டமன்றகூட்டத்தொடர் மொத்தம் நடந்த மணி நேரம்? 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் மொத்தம் 770 மணி நேரம் மற்றும் 23 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. 7. 16வது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எத்தனை? 16வது சட்டமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 230 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 8. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் எத்தனை?ஆளுநரால் 14 மசோதாக்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. 9. சட்டமன்றத்தில் திரும்ப பெறப்பட்ட மசோதாக்கள் எத்தனை? 16வது சட்டமன்ற கூட்டத்தொடரில் 4 மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. 10. 110 விதியின் கீழ் எத்தனை முறை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 37 முறை 110 விதியின்கீழ்அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர் 36 முறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 11. அதிக முறை கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்கள் யார்? யார்? அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உள்ளாட்சி அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். 12. 16வது சட்டசபைக் கூட்டத்தொடரில் 100 சதவீதம் விழுக்காடு வைத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேர்? 18 எம்.எல்.ஏ.க்கள் 13. சட்டமன்ற கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் கேட்பதற்காக பெறப்பட்ட கேள்விகள் எண்ணிக்கை? இந்த 5 ஆண்டுகால கூட்டத்தொடரில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 935 கேள்விகள் பெறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற இந்த 5 ஆண்டுகாலத்தில் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் இவ்வாறே அமைந்துள்ளது.